Writer Vetrivel C
Bringing Tamil History and Fantasy to Life – Explore the World I’ve Created.
My Books
கரிகாலன் – 1
’தனக்கு ஒப்பாரும் இல்லை; மிக்காரும் இல்லை’ எனப் பெரும் புகழ் படைத்த சோழப் பேரரசன் கரிகாற் பெருவளத்தானின் வீர வரலாறு.
வளவன் தாயின் வயிற்றில் இருந்த போது தந்தையையும், பிறந்த பிறகு தாயையும் இழந்தவன். வளர்ந்த போது தன் பகைவர்களிடம் நாட்டையும் இழந்தவன். அதற்குப் பிறகு தன் மாமன் இரும்பிடர்த்தலையருடன் சேர்ந்து போராடி சேரர், பாண்டியர் மற்றும் பதினொரு வேளிர்களை எதிர்த்துத் தோற்கடித்து, தனக்குரிய சோழ உரிமையை மீட்டு, சோழ தேசத்தின் பெருவேந்தனாக முடி சூடியவன். காவிரிக்கு அணை எழுப்பி, இமயத்தில் புலிக்கொடி பொறித்து, பெரும் புகழ் பெற்றவன். வளவன் தன் இளம் வயதில் சந்தித்த போராட்டங்கள், தனக்குரிய அரியணைக்காக அவன் நிகழ்த்திய போர்களே கரிகாலன் புதினம்.
வென்வேல் சென்னி –
சுதந்திர நாடுகளாக விளங்கிய தமிழகம் மற்றும் கலிங்கத்தைக் கைப்பற்றி பாரதவர்சத்தின் பேரரசனாக முடிசூட நினைக்கிறான், மௌரியப் பேரரசன் அசோகவர்த்தன். அவனது கட்டளையை ஏற்ற மௌரியப் படையினர் கலிங்கத்தை அழித்து சூரையாடுகிறார்கள். எஞ்சியிருப்பது தமிழகம் மட்டும் தான். ஆனால், அவர்களின் முயற்சிக்குக் குறுக்கே நிற்கிறான், சோழ இளவரசன் வென்வேல் சென்னி. ”கரும்பெண்ணை நதியைக் கடக்க எவன் நினைத்தாலும், அவன் தன் காதலியைத் தழுவுவதற்குத் திரும்பிச் செல்ல மாட்டான்” என்று அறைகூவல் விடுகிறான்.
பாரதவர்சத்தின் மிகப்பெரிய போரில் வெற்றி பெற்றது யார்?
முத்தொகுதி
ஆதனின் நீலி
இன்றிலிருந்து சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சு நாட்டுப் பள்ளத்தாக்கில் நடைபெற்ற கதை…
தன் குல தலைவனால் அடித்து விரட்டியடிக்கப்பட்ட ஆதன், மூத்தோளின் அறிவுறுத்தலின் படி துருவ வனத்தை நோக்கிச் செல்கிறான். அங்கிருந்து திரும்பி வரும்போது நீலியை சந்தித்தவன் காதல் கொள்கிறான். தன் காதலைக் கூறிய போது நீலி, “உன் குலத்தை அழிக்கச் செல்லும் என் காதலனைத் தடுத்து, முடிந்தால் அவனைத் தோற்கடித்து அவன் தலையுடன் வா, உன்னுடன் உடன்போக்கு மேற்கொள்கிறேன்” என்று சவால் விடுகிறாள்.
அவளது நிபந்தனையை விடவும், அவள் கூறிய தகவல் அவனைத் திடுக்கிடச் செய்கிறது. தன் குல மக்களைக் காக்க நினைக்கிறான் ஆதன். தன் குல மக்களை பகைவர்களிடமிருந்து காத்தானா? தன் காதலியின் சவாலை நிறைவேற்றினானா?
தேர்த்துகன் – 1
தசவர்க்கிகள், தமிழகத்தில் மறைத்து பாதுகாக்கப்படும் நவகதிரைக் கைப்பற்ற மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகவே போராடுகிறார்கள். அந்தத் தேடலை முடிவுக்குக் கொண்டுவர அதிதீவிரத்துடன் களத்தில் இறங்குகிறார்கள். அதே நேரம், நவகதிரைக் காப்பாற்ற ஒரு பிரிவினர் போராடுகிறார்கள். இருதரப்புக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தில் சிக்கிக் கொள்கிறான் எழுத்தாளர் வெற்றிவேல். அவனுக்கு என்ன ஆனது?
தசவர்க்கிகள் என்போர் யார்? அவர்கள் நவகதிரை எதற்காகத் தேடுகிறார்கள்? நவகதிரைப் பாதுகாக்க மூவேந்தர்களும் வேளிர்களும் எதற்காக தமிழகத்துக்கு வடக்கே கூட்டுப் படையை நிறுவினர்?
தசவர்க்கியின் தேடலும் நவகதிர் ரகசியமும்…
வானவல்லி
’தனக்கு ஒப்பாரும் இல்லை; மிக்காரும் இல்லை’ எனப் பெரும் புகழ் படைத்த சோழப் பேரரசன் கரிகாற் பெருவளத்தானின் வீர வரலாறு.
வளவன் தாயின் வயிற்றில் இருந்த போது தந்தையையும், பிறந்த பிறகு தாயையும் இழந்தவன். வளர்ந்த போது தன் பகைவர்களிடம் நாட்டையும் இழந்தவன். அதற்குப் பிறகு தன் மாமன் இரும்பிடர்த்தலையருடன் சேர்ந்து போராடி சேரர், பாண்டியர் மற்றும் பதினொரு வேளிர்களை எதிர்த்துத் தோற்கடித்து, தனக்குரிய சோழ உரிமையை மீட்டு, சோழ தேசத்தின் பெருவேந்தனாக முடி சூடியவன்.
வெண்ணிப் போரில் வேளிர்களைத் தோற்கடித்து, வடக்கே படையெடுத்துச் சென்று இமயத்தில் புலிக்கொடியைப் பதித்த கரிகாலனின் வீர வரலாறே, வானவல்லி.
நான்கு பாகங்கள்
மதுரைகொண்ட ராஜகேசரி – 1